முலைஒருபால் முகம்ஒருபால் காட்டும் பொல்லா முடமட வார்கள்தமை முயங்கி நின்றேன் இலைஒருபால் அனம்ஒருபால் மலஞ்சேர்த் துண்ணும் ஏழைமதி யேன்தணிகை ஏந்த லேபொன் மலைஒருபால் வாங்கியசெக வண்ண மேனி வள்ளல்தரு மருந்தேநின் மலர்த்தாள் ஏத்தேன் புலைஒருவா வஞ்சகநெஞ் சுடையேன் என்றன் புன்மைதனை எவர்க்கெடுத்துப் புகலு வேனே