முலைமுகங் காட்டி மயக்கிடும் கொடியார் முன்புழன் றேங்கும்இவ் எளியேன் நிலைமுகங் காட்டும் நின்திருப் பாத நீழல்வத் தடையும்நாள் என்றோ மலைமுகம் குழைய வளைத்திடும் தெய்வ மணிமகிழ் கண்ணினுள் மணியே கொலைமுகம் செல்லார்க் கருள்தருந் தணிகைக் குன்றமர்ந் திடுகுணக் குன்றே,