முலையைக் காட்டி மயக்கிஎன் ஆருயிர் முற்றும் வாங்குறும் முண்டைகள் நன்மதி குலையக் காட்டும் கலவிக்கி சைந்துநின் கோலங் காணக் குறிப்பிலன் ஆயினேன் நிலையைக் காட்டும்நல் ஆனந்த வெள்ளமே நேச நெஞ்சகம் நின்றொளிர் தீபமே கலையைக் காட்டும் மதிதவழ் நற்றணி காச லத்தமர்ந் தோங்கதி காரனே