முள்ளளவு நெஞ்ச முழுப்புலைய மாதர்களாம் கள்ளளவு நாயில் கடைப்பட்ட என்றனக்கு உள்ளளவும் அன்பர்க் குதவும்உன்தாட் கன்பொருசிற் றெள்ளளவும் உண்டோ எழுத்தறியும் பெருமானே