மூட நெஞ்சம்என் மொழிவழி நில்லா மோக வாரியின் முழுகுகின் றதுகாண் தேட என்வசம் அன்றது சிவனே திருவ ருட்கடல் திவலைஒன் றுறுமேல் நாட நாடிய நலம்பெறும் அதனால் நானும் உய்குவேன் நல்கிடல் வேண்டும் ஆடல் ஒற்றியாய் பெரும்பற்றப் புலியூர் அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே
மூட னேன்பிழை முற்றும் பொறுத்துனைப் பாட வேஅருட் பாங்கெனக் கீதியேல் நாட வேறும னையிடை நண்ணிநான் வாட வேண்டுவ தென்னைஎம் வள்ளலே