மூவருக்கும் எட்டாது மூத்ததிரு அடிகள் முழுதிரவில் வருந்தியிட முயங்கிநடந் தருளி யாவருக்கும் இழிந்தேன்இங் கிருக்கும்இடத் தடைந்தே எழிற்கதவந் திறப்பித்துள் எனைஅழைத்து மகனே தேவருக்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே சித்தமகிழ்ந் தளித்தனைநின் திருவருள்என் என்பேன் பூவருக்கும் பொழிற்றில்லை அம்பலத்தே நடனம் புரிந்துயிருக் கின்பருளும் பூரணவான் பொருளே