மெய்க்குலம் போற்ற விளங்கு மணாளர் வித்தகர் அம்பலம் மேவும் அழகர் இக்குல மாதரும் யானும்என் நாதர் இன்னருள் ஆடல்கள் பன்னுறும் போது பொய்க்குலம் பேசிப் புலம்பாதே பெண்ணே பூரண நோக்கம் பொருந்தினை நீதான் எக்குலம் என்கின்றார் என்னடி அம்மா என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா