மெய்ஞ்ஞான விருப்பத்தில் ஏறிக் கேள்வி மீதேறித் தெளிந்திச்சை விடுதல் ஏறி அஞ்ஞான மற்றபடி ஏறி உண்மை அறிந்தபடி நிலைஏறி அதுநான் என்னும் கைஞ்ஞானங் கழன்றேறி மற்ற எல்லாம் கடந்தேறி மவுனவியற் கதியில் ஏறி எஞ்ஞானம் அறத்தெளிந்தோர் கண்டுங் காணேம் என்கின்ற அநுபவமே இன்பத் தேவே