மெய்ந்நீ ரொற்றி வாணரிவர் வெம்மை யுளநீர் வேண்டுமென்றா ரந்நீ ரிலைநீர் தண்ணீர்தா னருந்தி லாகா தோவென்றேன் முந்நீர் தனையை யனையீரிம் முதுநீ ருண்டு தலைக்கேறிற் றிந்நீர் காண்டி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ