மெய்மையே அறிகிலா வீண னேன்இவன் உய்மையே பெறஉனை உன்னி ஏத்திடாக் கைமையே அனையர்தம் கடையில் செல்லவும் பொய்மையே உரைக்கவும் புணர்த்த தென்கொலோ