மெய்யகத் தேகணப் போதும் விடாது விரும்புகின்றோர் கையகத் தேநின் றொளிர்கனி யேநுதற் கட்கரும்பே வையகத் தேநினை அல்லாமல் நற்றுணை மற்றிலைஇப் பொய்யகத் தேன்செயும் தீங்கா யிரமும் பொறுத்தருளே