மெய்யர்உள் ளகத்தின் விளங்கும்நின் பதமாம் விரைமலர்த் துணைதமை விரும்பாப் பொய்யர் தம் இடத்திவ் வடியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி அளித்திடும் தெள்ளிய அமுதே தையலர் மயக்கற் றவர்க்கருள் பொருளே தணிகைவாழ் சரவண பவனே