மெய்யாக நின்னைவிட வேறோர் துணையில்லேன் ஐயா அதுநீ அறிந்ததுகாண் - பொய்யான தீதுசெய்வேன் தன்பிழையைச் சித்தங் குறித்திடில்யான் யாதுசெய்வேன் அந்தோ இனி