மெய்யாவோ நற்றணிகை மலையைச் சார்ந்து மேன்மையுறும் நின்புகழை விரும்பி ஏத்தேன் உய்யாவோ வல்நெறியேன் பயன்ப டாத ஓதிஅனையேன் எட்டிதனை ஒத்தேன் அன்பர் பொய்யாஓ டெனமடவார் போகம் வேட்டேன் புலையனேன் சற்றேனும் புனிதம் இல்லேன் ஐயாவோ நாணாமல் பாவி யேன்யான் யார்க்கெடுத்தென் குறைதன்னை அறைகு வேனே