மெய்யுணர்ந்த வாதவூர் மலையைச் சுத்த வெளியாக்கிக் கலந்துகொண்ட வெளியே முற்றும் பொய்யுணர்ந்த எமைப்போல்வார் தமக்கும் இன்பம் புரிந்தருளும் கருணைவெள்ளப் பொற்பே அன்பர் கையுறைந்து வளர்நெல்லிக் கனியே உள்ளம் கரைந்துகரைந் துருகஅவர் கருத்தி னூடே உய்யுநெறி ஒளிகாட்டி வெளியும் உள்ளும் ஓங்குகின்ற சுயஞ்சுடரே உண்மைத் தேவே