மெலிந்தஎன் உளத்தை அறிந்தனை தயவு மேவிலை என்னையோ என்றாள் நலிந்தபோ தின்னும் பார்த்தும்என் றிருத்தல் நல்லவர்க் கடுப்பதோ என்றாள் மலிந்த இவ்வுலகர் வாய்ப்பதர் தூற்ற வைத்தல்உன் மரபல என்றாள் வலிந்தெனைக் கலந்த வள்ளலே என்றாள் வரத்தினால் நான்பெற்ற மகளே