மேலவ னேதிரு அம்பலத் தாடல் விளக்கும்மலர்க் காலவ னேகனல் கையவ னேநுதற் கண்ணவனே மாலவன் ஏத்தும் சிவகாம சுந்தர வல்லியைஓர் பாலவ னேஎனைப் பாலகன் ஆக்கிய பண்பினனே