Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :175
மேலை வானவர் வேண்டும் நின்திருக்
காலை என்சிரம் களிக்க வைப்பையோ
சாலை ஓங்கிய தணிகை வெற்பனே
வேலை ஏந்துகை விமல் நாதனே
பாடல் எண் :761
மேலை அந்தகன் வெய்ய தூதுவர்
ஓலை கட்டுமுன் ஒற்றி யூரில்வாழ்
பாலை சேர்படம் பக்க நாதர்தம்
காலை நாடிநற் கதியின் நிற்பையே
பாடல் எண் :1691
மேலை விணையைத் தவிர்த்தருளும் விடையார் ஒற்றி விகிர்தர்அவர் 
மாலை கொடுப்பார் உணங்குதலை மாலை அதுதான் வாங்குவையே 
ஆல மிடற்றார் காபாலி ஆகித் திரிவார் அணைவிலரே 
ஏல மயல்கொண் டென்பெறுவாய் ஏழை அடிநீ என்மகளே
பாடல் எண் :4536
மேலை வெளியா மருந்து - நான் 

வேண்டுந்தோ றெல்லாம் விளையு மருந்து 
சாலை விளக்கு மருந்து - சுத்த 

சமரச சன்மார்க்க சங்க மருந்து  ஞான

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.