மேலைஏ காந்த வெளியிலே நடஞ்செய் மெய்யனே ஐயனே எனக்கு மாலையே அணிந்த மகிழ்நனே எல்லாம் வல்லனே நல்லனே அருட்செங் கோலையே நடத்தும் இறைவனே ஓர்எண் குணத்தனே இனிச்சகிப் பறியேன் காலையே தருதற் கிதுதகு தருணம் கலந்தருள் கலந்தருள் எனையே