மேவிஎன் உள்ளகத் திருந்து மேலும்என் ஆவியிற் கலந்திவன் அவன்என் றோதும்ஓர் பூவியற் பேதமும் போக்கி ஒன்றதாய்த் தேவியற் புரிந்தனன் சிதம்ப ரேசனே போற்றிச் சந்த விருத்தம் சந்த விருத்தம்