மைகொடுத் தார்நெடுங் கண்மலை மானுக்கு வாய்ந்தொருபால் மெய்கொடுத் தாய்தவர் விட்டவெம் மானுக்கு மேவுறஓர் கைகொடுத் தாய்மயல் கண்ணியில் வீழ்ந்துட் கலங்குறும்என் கொய்கொடுத் தாழ்மன மானுக்குக் காலைக் கொடுத்தருளே