மைக்கொண் மிடற்றீ ரூரொற்றி வைத்தீ ருண்டோ மனையென்றேன் கைக்க ணிறைந்த தனத்தினுந்தங் கண்ணி னிறைந்த கணவனையே துய்க்கு மடவார் விழைவரெனச் சொல்லும் வழக்கீ தறிந்திலையோ வெய்க்கு மிடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ