மைதவழ் விழிஎன் அம்மைஓர் புடைகொள் வள்ளலே நின்னைஅன் பாலும் வைதவர் தமைநான் மதித்திலேன் அன்பால் வாழ்த்துகின் றோர்தமை வாழ்த்தி உய்தவர் இவர்என் றுறுகின்றேன் அல்லால் உன்அருள் அறியநான் வேறு செய்ததொன் றிலையே செய்தனன் எனினும் திருவுளத் தடைத்திடல் அழகோ