மையான நெஞ்சகத்தோர் வாயில் சார்ந்தே மனம்தளர்ந்தேன் வருந்துகின்ற வருத்தம் எல்லாம் ஐயாஎன் உளத்தமர்ந்தாய் நீதான் சற்றும் அறியாயோ அறியாயேல் அறிவா ர்யாரே பொய்யான தன்மையினேன் எனினும் என்னைப் புறம்விடுத்தல் அழகேயோ பொருளா எண்ணி மெய்யாஎன் றனைஅந்நாள் ஆண்டாய் இந்நாள் வெறுத்தனையேல் எங்கேயான் மேவு வேனே