மோகஇருட் கடல்கடத்தும் புணைஒன்று நிறைந்த மோனசுகம் அளிப்பிக்கும் துணைஒன்றென் றுரைக்கும் யோகமலர்த் திருவடிகள் வருந்தநடந் தருளி உணர்விலியேன் பொருட்டாக இருட்டிரவில் நடந்து போகமனைப் பெருங்கதவந் திறப்பித்துட் புகுந்து புலையேனை அழைத்தொன்று பொருந்தஎன்கை கொடுத்தாய் நாகமணிப் பணிமிளிர அம்பலத்தே நடஞ்செய் நாயகநின் பெருங்கருணை நவிற்றமுடி யாதே