மோகம் என்னும்ஓர் மூடரில் சிறந்தோய் முடிவி லாத்துயர் மூலஇல் ஒழுக்கில் போகம் என்னும்ஓர் அளற்றிடை விழவும் போற்று மக்கள்பெண் டன்னைதந் தையராம் சோக வாரியில் அழுந்தவும் இயற்றிச் சூழ்கின் றாய்எனைத் தொடர்ந்திடேல் தொடரில் ஓகை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே