யாதும் உன்செய லாம்என அறிந்தும் ஐய வையமேல் அவர்இவர் ஒழியாத் தீது செய்தனர் நன்மைசெய் தனர்நாம் தெரிந்து செய்வதே திறம்என நினைத்துக் கோது செய்மலக் கோட்டையைக் காவல் கொண்டு வாழ்கிறேன் கண்டிட இனிநீ ஓது செய்வதொன் றென்னுயிர்த் துணையே ஒற்றி மேவிய உலகுடை யோனே