யான்செய் தவத்தின் பெரும்பயனே யென்னா ரமுதே யென்றுணையே வான்செ யரசே திருவொற்றி வள்ளால் வந்த தென்னென்றேன் மான்செய் விழிப்பெண் ணேநீயாண் வடிவா னதுகேட் டுள்ளம்வியந் தேன்கண் டிடவே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ