யாரினும் கடையேன் யாரினும் சிறியேன் என்பிழை பொறுப்பவர் யாரே பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே பாவியேன் பிழைபொறுத் திலையேல் ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி உடம்பைவைத் துலாவவும் படுமோ சேரினும் எனைத்தான் சேர்த்திடார் பொதுவாம் தெய்வத்துக் கடாதவன் என்றே