யோக முடையார் புகழொற்றி யூரிற் பரம யோகியராந் தாக முடையா ரிவர்தமக்குத் தண்ணீர் தரநின் றனையழைத்தேன் போக முடையாய் புறத்தண்ணீர் புரிந்து விரும்பா மகத்தண்ணீ ரீக மகிழ்வி னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ