யோகமே யோகத்தின் பயனே யோகத் தொருமுதலே யோகத்தின் ஓங்குந் தூய போகமே போகத்தின் பொலிவே போகம் புரிந்தருளும் புண்ணியமே புனித ஞான யாகமே யாகத்தின் விளைவே யாகத் திறையேஅவ் விறைபுரியும் இன்பே அன்பர் மோகமே மோகமெலாம் அழித்து வீறு மோனமே மோனத்தின் முளைத்த தேவே