யோகாந்த மிசைஇருப்ப தொன்றுகலாந் தத்தே உவந்திருப்ப தொன்றெனமெய் யுணர்வுடையோர் உணர்வால் ஏகாந்தத் திருந்துணரும் இணையடிகள் வருந்த என்பொருட்டாய் யானிருக்கும் இடந்தேடி நடந்து வாகாந்தச் சணிக்கதவந் திறப்பித்தங் கென்னை வரவழைத்தென் கைதனிலே மகிழ்ந்தொன்று கொடுத்தாய் மோகாந்த காரம்அறுத் தவர்ஏத்தப் பொதுவில் முயங்கிநடம் புரிகின்ற முக்கனுடை அரசே