வகுத்தஉயிர் முதற்பலவாம் பொருள்களுக்கும் வடிவம் வண்ணநல முதற்பலவாங் குணங்களுக்கும் புகுதல் புகுத்தலுறல் முதற்பலவாம் செயல்களுக்கும் தாமே புகல்கரணம் உபகரணம் கருவிஉப கருவி மிகுந்தஉறுப் பதிகரணம் காரணம்பல் காலம் விதித்திடுமற் றவைமுழுதும் ஆகிஅல்லார் ஆகி உகப்புறும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்