வகைஎது தெரிந்தேன் ஏழையேன் உய்வான் வள்ளலே வலிந்தெனை ஆளும் தகைஅது இன்றேல் என்செய்வேன் உலகர் சழக்குடைத் தமியன்நீ நின்ற திகைஎது என்றால் சொலஅறி யாது திகைத்திடும் சிறியனேன் தன்னைப் பகைஅது கருதா தாள்வதுன் பரங்காண் பவளமா நிறத்தகற் பகமே