வஞ்சக வினைக்கோர் கொள்கலம் அனைய மனத்தினேன் அனைத்தினும் கொடியேன் தஞ்சம்என் றடைந்தே நின்திருக் கோயில் சந்நிதி முன்னர்நிற் கின்றேன் எஞ்சலில் அடங்காப் பாவிஎன் றெனைநீ இகழ்ந்திடில் என்செய்வேன் சிவனே கஞ்சன்மால் புகழும் ஒற்றியங் கரும்பே கதிதரும் கருணையங் கடலே