வடிக்குந் தமிழ்த்தீந் தேன்என்ன வசனம் புகல்வார் ஒற்றிதனில் நடிக்குந் தியாகர் திருமுன்போய் நாராய் நின்று நவிற்றாயோ பிடிக்குங் கிடையா நடைஉடைய பெண்க ளெல்லாம் பிச்சிஎன நொடிக்கும் படிக்கு மிகுங்காம நோயால் வருந்தி நோவதுவே