வடியாக் கருணை வாரிதியாம் வள்ளல் உன்தாள் மலர்மறந்தே கொடியா ரிடம்போய்க்குறையிரந்தேன் கொடியேன் இனிஓர் துணைகாணேன் அடியார்க் கெளிய முக்கணுடை அம்மான் அளித்த அருமருந்தே முடியா முதன்மைப் பெரும்பொருளே முறையோ முறையோ முறையேயோ திருச்சிற்றம்பலம் நெஞ்சவலங் கூறல் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்