வட்ட மதிபோல் அழகொழுகும் வதன விடங்கர் ஒற்றிதனில் நட்ட நவில்வார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றாயோ கட்ட அவிழ்ந்த குழல்முடியாள் கடுகி விழுந்த கலைபுனையாள் முட்ட விலங்கு முலையினையும் மூடாள் மதனை முனிந்தென்றே