வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர் வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர் பெட்டிமேல் பெட்டிவைத் தாள்கின்றீர் வயிற்றுப் பெட்டியை நிரப்பிக்கொண் டொட்டியுள் இருந்தீர் பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர் பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர் எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோல் கிளைத்தீர் எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே