வண்டணிபூங் குழல்அம்மை எங்கள்சிவ காம வல்லியொடு மணிமன்றில் வயங்கியநின் வடிவம் கண்டவரைக் கண்டவர்தம் கால்மலர்முத் தேவர் கனமுடிக்கே முடிக்கின்ற கடிமலராம் என்றால் பண்டகுநின் திருத்தொண்டர் அடிப்பெருமை எவரே பகர்ந்திடுவர் மறைகளெலாம் பகர்ந்திடுவான் புகுந்தே விண்டுலர்ந்து வெளுத்தஅவை வெளுத்தமட்டோ அவற்றை வியந்தோதும் வேதியரும் வெளுத்தனர்உள் உடம்பே