வண்டுகொண் டார்நறுங் கொன்றையி னான்றன் மலரடிக்குத் தொண்டுகொண் டார்தஞ் சுகத்துக்கும் வாழ்க்கைச் சுழலிற்றள்ளும் பெண்டுகொண் டார்தம் துயருக்கும் ஒப்பின்று பேசில்என்றே கண்டுகொண் டாய்இனி நெஞ்சேநின் உள்ளக் கருத்தெதுவே