வண்ண னேஅருள் வழங்கும் பன்னிரு கண்ண னேஅயில் கரங்கொள் ஐயனே தண்ண னேர்திருத் தணிகை வேலனே திண்ணம் ஈதருள் செய்யும் காலமே
வண்ண மாமுல்லை வாயிலின் மேவிய அண்ண லேஅமு தேஅரை சேநுதல் கண்ண னேஉனைக் காணவந் தோர்க்கெல்லாம் நண்ண ருந்துயர் நல்குதல் நன்றதோ