வண்ணப்பல் மாமலர் மாற்றும் படிக்கு மகிழ்ந்தெமது திண்ணப்பர் சாத்தும் செருப்படி மேற்கொண்ட தீஞ்சுவைத்தாய் உண்ணப் பரிந்துநல் ஊன்தர உண்டுகண் ஒத்தக்கண்டே கண்ணப்ப நிற்க எனக்கைதொட் டார்எம் கடவுளரே