வண்ணம் வேறெனினும் வடிவுவே றெனினும் மன்னிய உண்மை ஒன்றென்றே எண்ணிய தல்லால் சச்சிதா னந்தத் திறையும்வே றெண்ணிய துண்டோ அண்ணல்நின் பாதம் அறியநான் அறியேன் அஞர்இனிச் சிறிதும்இங் காற்றேன் திண்ணமே நின்மேல் ஆணைஎன் தன்னைத் தெளிவித்துக் காப்பதுன் கடனே