வண்பூவில் வடிவுபல வண்ணங்கள் பலமேல் மதிக்கும்இயல் பலஒளியின் வாய்மைபல ஒளிக்குள் நண்பூறும் சத்திபல சத்திகளுள் வயங்கும் நாதங்கள் பலநாத நடுவணைஓர் கலையில் பண்பாய நடங்கள்பல பலபெயர்ப்பும் காட்டும் பதிகள்பல இவைக்கெல்லாம் பதியாகிப் பொதுவில் கண்பாய இவற்றினொடு கலந்துகல வாமல் காணுகின்ற திருவடிச்சீர் கழறுவதார் தோழி