வண்மைபெறு நின்அன்பர் எல்லாம் நின்னை வந்தனைசெய் தாநந்த வயத்தே நின்றார் பெண்மையுறும் மனத்தாலே திகைத்தேன் நின்சீர் பேசுகிலேன் கூசுகிலேன் பேதை நானோர் ஒண்மையிலேன் ஒழுக்கமிலேன் நன்மை என்ப தொன்றுமிலேன் ஓதியேபோல் உற்றேன் மிக்க அண்மையில்வந் தருள்புரிவோய் என்னே வீணில் அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ