வதன நான்குடை மலரவன் சிரத்தை வாங்கி ஓர்கையில் வைத்தநம் பெருமான் நிதன நெஞ்கர்க் கருள்தரும் கருணா நிதிய மாகிய நின்மலப் பெருமான் சுதன மங்கையர் நடம்செயும் ஒற்றித் தூய னால்அவர் துணைத்திருத் தோட்கு மதன இன்தமிழ் மாலையோ டணுபூ மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே