வந்தருள் புரிக விரைந்திது தருணம் மாமணி மன்றிலே ஞான சுந்தர வடிவச் சோதியாய் விளங்கும் சுத்தசன் மார்க்கசற் குருவே தந்தருள் புரிக வரம்எலாம் வல்ல தனிஅருட் சோதியை எனது சிந்தையில் புணர்ப்பித் தென்னொடுங் கலந்தே செய்வித் தருள்கசெய் வகையே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- திருக்கதவந் திறத்தல் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்