வந்தாள்வாய் ஐயாவோ வஞ்சர் தம்பால் வருந்துகின்றேன் என்றலறும் மாற்றம் கேட்டும் எந்தாய்நீ இரங்காமல் இருக்கின் றாயால் என்மனம்போல் நின்மனமும் இருந்த தேயோ கந்தாஎன் றுரைப்பவர்தம் கருத்துள் ஊறும் கனிரசமே கரும்பேகற் கண்டே நற்சீர் தந்தாளும் திருத்தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே