வந்தென் எதிரில் நில்லாரோ மகிழ ஒருசொல் சொல்லாரோ முந்தம் மதனை வெல்லாரோ மோகம் தீரப் புல்லாரோ கந்தன் எனும்பேர் அல்லாரோ கருணை நெஞ்சம் கல்லாரோ சந்தத் தணிகை இல்லாரோ சகத்தில் எல்லாம் வல்லாரே